மகளின் புகைப்படத்தை வெளியிட கேட்ட ரசிகருக்கு.. விராட் கோலி கொடுத்த பதிலடி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும், அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவது மட்டும் இன்றி, சில வெப் தொடர்களை தயாரித்தும் வருகிறார்.

இதையடுத்து, இவர்களுக்கு பிறந்த அழகிய பெண் குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால், இதுவரை குழந்தையின் முகத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடாமல் இருந்தனர்.

இதற்கு ரசிகர் ஒருவர், வாமிகாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுமாறு கேட்டதற்கு, விராட் கோலி மறுத்துள்ளார்.

மேலும், சமூக ஊடகங்கள் பற்றி புரிந்துகொள்வதற்கு முன், எங்கள் குழந்தையை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்….

Sharing is caring!