கோலிக்கு என்னாச்சு? மீண்டும் தவறான முடிவு எடுத்ததால் படுதோல்வியடைந்த பெங்களூர் அணி…

ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியிடம் பெங்களூர் அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன் கோலியின் தவறான முடிவுகளே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

14வது ஐபிஎல் தொடரின் 31வது போட்டி தற்போது அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலி, படிக்கல், டிவில்லியர்ஸ் என அனைவரும் மிக மோசமான முறையில் ஆட்டமிழந்தனர்.

19 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ஷப்மன் கில், வெங்கடேஷ் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

Sharing is caring!