நாளை சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க தோனி வருவாரா?

வருவாரா? தோனி வருவாரா… ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளை சென்னையில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க தோனி வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் இந்தியாவில் நடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான ‘மினி’ ஏலம் நாளை மதியம் சென்னையில் நடக்கவுள்ளது. ஏலத்தில் பங்கேற்க 1097 வீரர்கள் பதிவு செய்தனர். இதிலிருந்து 292 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியானது.

164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்களுடன், 3 ஐ.சி.சி., உறுப்பு அணிகளின் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழகம் சார்பில் ஷாருக்கான், சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், முகமது என 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை அணிக்கான வீரர்கள் தேர்வில் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தான் வழக்கமாக பங்கேற்பார். கேப்டன் தோனி பங்கேற்றதில்லை. தற்போது சர்வதேச போட்டிகளில் தோனி ஓய்வு பெற்று விட்டதால், நாளை நடக்கும் ஏலத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில்,”தோனி, பிளமிங் என இருவரும் சென்னை வரமாட்டர், ஏலத்தில் பங்கேற்கப் போவதில்லை. இப்போதுள்ள சூழலில் பல்வேறு ‘மீடியா’ உள்ளன. ஏலத்தின் போது இருவரும் ‘டிஜிட்டல்’ வழியாக எங்களுடன் இணைந்திருப்பர்,” என்றார்.

Sharing is caring!