உலக கோப்பை வில்வித்தை: பெண்கள் அணி தங்க பதக்கம் வென்றது

உலக கோப்பை வில்வித்தையில் கலப்பு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் நெதர்லாந்து ஜோடியை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்–3’ போட்டி நடக்கிறது. கலப்பு இரட்டையர் ‘ரிகர்வ்’ பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் ஜோடி இறுதி போட்டியில் நெதர்லாந்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் தீபிகா குமாரி- அட்டானு தாஸ் 5-3 என வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றனர்.

பெண்களுக்கான அணியில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பரி ஆகியோர் ரிகர்வ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றனர். மெக்சிகோ அணியை 5-1 எனத் தோற்கடித்தது.
ஏற்கனவே, ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவில் அபிஷேக் வர்மா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

Sharing is caring!