உலக கிண்ண தகுதி சுற்று; மலேசியா UAE அணியைச் சந்திக்கிறது

 

கோலாலம்பூர், மார்ச் 12– உலகக் கிண்ண, ஆசிய கிண்ண காற்பந்தாட்டங்களுக்கான எஞ்சிய தகுதி சுற்று ஆட்டங்களில், Harimau Malaya  களமிறங்கவிருக்கிறது.

ஜி (G) குழுவுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள்  ஜூன் 3–ஆம்  தேதியிலிருந்து ஜூன் 15–ஆம்  தேதி வரை நடைபெறவிருக்கின்றன.

ஜூன் மூன்றாம் தேதி, மலேசியா , ஐக்கிய அரபு சிற்றரசுடன் ( UAE) களம் காணும். ஜூன் 11- ஆம் தேதி  வியட்னாமுடனும், நான்கு தினங்கள் கழித்து  தாய்லாந்து அணியுடனும்  மோதும் என  AFC  ஆசிய காற்பந்து சம்மேளனம் தெரிவித்தது.
அந்த தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறவிருக்கும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

கோவிட் தொற்றை அடுத்து , மார்ச்சில் நடைபெறவிருந்த அந்த தகுதி சுற்று ஆட்டங்களை ஆசிய காற்பந்து சம்மேளனம் ஒத்தி வைத்தது.

இதுவரை நடைபெற்ற ஐந்து ஆட்டங்களை அடுத்து, ஜி குழுவில்,   வியட்னாமிற்கு அடுத்த நிலையில் ஒன்பது புள்ளிகளுடன் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

தாய்லாந்து, ஐக்கிய அரபு சிற்றரசு , இந்தோனேசியா ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

Sharing is caring!