உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் அன்ஷூ மாலிக்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடைபெற்றது.

இதன் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இளம் புயல் அன்ஷூ மாலிக் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் (அமெரிக்கா) இன்று மல்லுகட்டினார். இதில் ஹெலினிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார் அன்ஷூ
மாலிக். இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று என்ற சாதனையையும் படைத்தார்.

இதேபோல், பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்னை சரிதா மோர் 8-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்வீடனின் சாரா லிண்ட்பெர்க்கை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 6-வது வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!