அடுத்த மாத ஆரம்பத்தில் அறிமுகமாகின்றது LG Velvet ஸ்மார்ட் கைப்பேசி

முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனமான LG அடுத்த மாதம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி LG Velvet எனும் குறித்த கைப்பேசியானது மே மாதம் 7 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான டீசர் வீடியோ ஒன்று LG நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

Aurora White, Aurora Gray, Aurora Green, மற்றும் Illusion Sunset ஆகிய நான்கு வர்ணங்களில் குறித்த கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அறிமுகம் செய்வதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் விரைவில் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Sharing is caring!