அட்டகாசமான வசதிகளுடன் Vivo அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி

சீனாவை தளமாகக் கொண்ட Vivo நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

Vivo Z6 5G எனும் குறித்த கைப்பேசியானது 6.57 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய Full HD+ திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 765G mobile processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM தரப்பட்டுள்ளது.

இதில் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

தவிர 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய மைக்ரோ கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய டெப்த் கமெரா என நான்கு பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

44W அதிவேகமாக சார்ஜ் ஆகக்கூடிய 5,000mAh மின்கலத்தினையும் உள்ளடக்கியுள்ள இக் கைப்பேசியின் விலையானது 330 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Sharing is caring!