அதிசய நச்திர கிரகணம் நாளை…இதை மட்டும் செய்திடாதீங்க

இந்த நூற்றாண்டின் அதிசயமான  நீண்ட சந்திர கிரகணம் நிகழ்வதற்கு  இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது . வருகின்ற ஜூலை 27ம் தேதி நள்ளிரவில் இந்த வருடத்தின் மிக நீளமான சந்திரகிரகணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 48 நிமிடங்களுக்கு நடைபெறுமாம். இந்த அதிசய நிகழ்வோடு மற்றொரு அதிசய நிகழ்வும் நடைபெற இருக்கிறது. அது என்னவென்றால் ‘ப்ளட் மூன்’.  கிரகணத்தின் போது சூரியனுக்கும் நிலவிற்கும் நடுவில் பூமி  பயணிக்கும். அந்த சமயத்தில் பூமியின் படும் சூரியக் கதிர் பிரதிபலிப்பு நிலவில் விழும். இதனால் பால் நிலா அந்த குறிப்பிட்ட நேரம் மட்டும் சிவப்பு நிலாவாகத் தெரியும். இதையே ப்ளட் மூன் என்கின்றனர்.

இந்தியாவில் இந்த  நிகழ்வு இரவு 11.54 மணி அளவில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிசய நிகழ்வினை இந்தியா முழுவதும் பார்க்க இயலும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்தியா மட்டுமில்லாமல் ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்காவிலும் இந்த நீண்ட சந்திர கிரகணத்தை காணலாம். இந்த அதிசய நிகழ்வான செவ்வாய் கிரகம் ஜூலை 31ம் தேதி பூமிக்கு வெகு அருகில் பயணிக்க இருக்கிறது. இந்நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் மிக அறிய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நீண்ட சந்திரகிரகணத்தை அடுத்து நீங்கள் காண ஜூன் 9, 2123ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் மருத்துவ தொழில்நுட்பத்தின்படிக் கூட அத்தனை ஆண்டுகள் உயிர்வாழ்வது சாத்தியமில்லை. அதனால், தூக்கத்துக்கு இடம் கொடுக்காமல், வானில் நடக்கும் மிகமிக அரிய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாமே!

இன்னும் இரண்டு நாட்களில் வானில் நிகழவுள்ள அதிசய சந்திரகிரகணத்தின்போது இதையெல்லாம் செய்யாமல் இருந்தால் நல்லது என பெரியவர்கள் ஃபிரி அட்வைஸ் கொடுத்துள்ளனர்.

சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வுக்கு சந்திரகிரகணம் என அறிவியல் ரீதியில் கூறுகின்றனர். அதாவது புரியும்படி சொன்னால் கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றுக்கும் இடையிலுள்ள கண்ணாமூச்சி விளையாட்டு ஆகும். கிரகணத்தின் போது சூரியனுக்கும் நிலவிற்கும் இடையே பூமி பயணிக்கும். அந்த சமயத்தில் பூமியின் படும் சூரியக் கதிர் பிரதிபலிப்பு நிலவில் விழும் ஒளிந்து கொள்ளும். இதனால் பூமியின்மீது படும் சூரியக் கதிர்கள் நிலவில் விழும்.விண்வெளி கண்ணாமூச்சு ஆட்டத்திற்குள் நாம் ஏன் செல்லவேண்டும் என்ற கேள்வி ஏழலாம். ஆனால் நம்மை சுற்றிதான் இந்த அதிசய நிகழ்வு நடக்கிறது.

கிரகண நேரத்தில் செய்யக்கூடாதவை:

  • கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என பெரியவர்கள் அறிவுறுத்துகின்றனர். பிரகாசமான ஒளி விழித்திரையை பாதிக்கும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தைவிட இரவில் தோன்றும் சந்திர கிரகணம் அவ்வளவு வீரியமாக இருக்காது எனவே சந்திரனை பார்ப்பதால் எந்த பாதிப்பும் இல்லை.
  • கிரகணத்தின்போது கதிர்வீச்சு வெளிபாடு அதிகம் இருக்கும், அது உயிரினங்களின் தோல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியில் வராமல் இருப்பது நல்லது.
  • சந்திரகிரகணத்தின்போது தண்ணீர்கூட அருந்தாமல் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம், ஆனால் கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு கிரகணத்திற்கு முன் விஷமாக மாறிவிடுவதாக மூடநம்பிக்கையுள்ளது. ஆனால் உண்மையில் வயிறு நிறைய சாப்பிட்டால் நாம் அமைதியாக ஆழ்ந்த தெய்வ சிந்தனையுடன் இருக்க மாட்டோம், சந்திரகிரகணத்தின்போது ஆழ்ந்த தெய்வ சிந்தனையில் இருக்க வேண்டும் என்பதால்தான் உணவருந்தகூடாது  என கூறுகின்றனர்.
  • உண்மையில் கிரகணத்தின்போது, மற்ற நாட்களைவிட சமைத்த உணவு அதிவிரைவாக சிதைவுறும். ஆதலால் கிரகணத்திற்கு முன் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என பெரியவர்கள் கூறுகின்றனர்.
  • கிரகணம் என்பது தோஷ காலமாக கருதப்படுவதால் கிரகண நேரத்தில் கோயில்களில் வழிபாடுகள் நடக்காது. எனவே கிரகணத்தின் போது கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

Sharing is caring!