அதிவேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் கைப்பேசி

ஸ்மார்ட் கைப்பேசிகளில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

இந்த வரிசையில் இந்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள Samsung Fold கைப்பேசியில் 25 வாட்ஸ் அதிவேக சார்ஜ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சாம்சுங் நிறுவனம் முதன் முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வருடம் அறிமுகம் செய்திருந்தது. எனினும் இதன் விலை அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் இவ் வருடம் குறைந்த விலையில் Samsung Galaxy Fold 2 எனும் மற்றுமொரு மடிக்கக்கூடிய கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே இப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இக் கைப்பேசியானது இவ் வருடம் பெப்ரவரி மாதமளவில் அறிமுகமாகும் என நம்பப்படுகின்றது.