அறிமுகமாகியது Realme C3 ஸ்மார்ட் கைப்பேசி

அற்புதமான வசதிகளுடன் Realme C3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6.5 அங்குல அளவு மற்றும் HD+ தொழில்நுட்பத்தினாலான திரையினைக் கொண்ட இக் கைப்பேசி இரு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பிரதான நினைவகமாக 3GB மற்றும் 4GB RAM என்பனவற்றுடனும், 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகத்துடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய இரு பிரதான கமெராக்களையும், 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவும் தரப்பட்டுள்ளது.

Android 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ColorOS 7 இயங்குதளத்தில் செயற்படும் இக் கைப்பேசியில் 5,000mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 32GB சேமிப்பு கொள்ளளவுடைய ஸ்மார்ட் கைப்பேசியின் விலை ஏறத்தாழ 110 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!