அறிமுகமாகியது ZTE Axon 11 5G ஸ்மார்ட் கைப்பேசி

ZTE நிறுவனமானது Axon 11 5G எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இம் மாத ஆரம்பத்தில் இக் கைப்பேசி அறிமுகம் செய்வது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது சீனாவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6.47 அங்குல அளவுடையதும், AMOLED தொழில்நுட்பத்தினாலானதுமான Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Snapdragon 765G mobile processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM மற்றும் 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் என இரு வேறு மொடல்களைக் கொண்டுள்ளது.

தவிர 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தம் 4 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 380 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Sharing is caring!