அறுவைச் சிகிச்சைமூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வீதம் அதிகரிப்பு

அறுவைச் சிகிச்சைமூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வீதம் உலகளவில் சுமார் இரண்டு மடங்காக அதிகாரித்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

2000ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அது 12 வீதத்தில் இருந்து 21 வீதமாக உயர்ந்துள்ளது.

பணவசதி இருப்போரிடம் அறுவைச் சிகிச்சைமுறை அளவுக்கு மீறி பயன்படுத்தப்படுவதாகப் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. வசதிகுறைந்த நாடுகளில் பெண்கள் அதனை நாடுவதில்லை. அந்த ஆய்வின் முடிவுகள் ‘தி லன்செட்’ மருத்துவ சஞ்சிகையில் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
குறைந்தது 15 நாடுகளில் 40 வீதத்திற்கும் அதிகமாகக் குழந்தைகள் அறுவைச் சிகிச்சைமூலம் ஈன்றெடுக்கப்படுகின்றன.

அந்த வீதம் மிக அதிகமாக டோமினிகன் குடியரசில் பதிவானது. அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் 58.1 வீதமான குழந்தைகள் பிறக்கின்றன.

Sharing is caring!