ஆப்பிள் iphone XR விலை குறைப்பு….?

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த ஐபோன் XR மாடலின் விலையை ஜப்பானில் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புது ஐபோன் வெளியான ஒரே மாதத்திற்குள் விலையை குறைக்க பரிசீலனை செய்வது ஆப்பிள் நிறுவன வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஜப்பானில் இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்கள் ஐபோன் XR விலையை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஐபோன் 8 தொடர்ந்து பிரபலமான ஐபோன்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் XR ஜப்பானி்யர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.

ஜப்பானில் ஐபோன் XR விலை குறைப்பு பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. ஜப்பானை போன்றே இந்தியாவில் ஐபோன் XR விலை குறைவது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

எனினும் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ஃபாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் நிறுவனங்களிடம் ஐபோன் XR மாடலை கூடுதலாக உற்பத்தி செய்யும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆப்பிள் நிறுவனம் கேட்டுக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2018ல் ஆப்பிள் அறிமுகம் செய்த மூன்று ஐபோன் மாடல்களின் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்கள் எதிர்பார்ப்புகளைக் கூட பூர்த்தி செய்யாமல் மிக குறைவான விற்பனை பதிவு செய்ததது.

ஐபோன் XR விற்பனை ஆப்பிள் நிறுவனத்திற்கு தொடர்ந்து நெருக்கடி சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் ஏழு கோடி யூனிட்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

எனினும் மோசமான விற்பனை காரணமாக மூன்றில் ஒரு பங்கு யூனிட்களின் தயாரிப்பை நிறுத்த ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Sharing is caring!