இணையத் தேடல் வேகத்தினை அதிகரிக்கும் 5 கூகுள் குரோம் நீட்சிகள்

தற்போது 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணையத் தொழில்நுட்பம் உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் காணப்படுகின்றது.

ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள போதிலும் சில நாடுகளின் குறிப்பிட்ட பிரதேசங்களில் மாத்திரம் உள்ளவர்கள் 5G சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நான்காம் தலைமுறை இணையத் தொழில்நுட்பம் பல இடங்களில் காணப்படுகின்ற போதிலும் அவற்றிற்கான போதிய சமிக்ஞைகள் கிடைக்காத இடங்களும் காணப்படுகின்றன.

இவ்வாறான பகுதிகளில் இணைய உலாவல் வேகம் சற்று குறைவாகவே இருக்கும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூகுள் குரோமில் சில நீட்சிகளை பயன்படுத்துவதன் ஊடாக இணைய வேகத்தினை அதிகரித்துக்கொள்ள முடியும்.

அவ்வாறான 5 கூகுள் குரோம் நீட்சிகள் இதோ.

  • FasterChrome
  • uBlock Origin
  • Web Boost
  • The Great Suspender
  • GooglePreview

இவற்றில் ஏதாவது ஒரு நீட்சியை நிறுவிக்கொள்வதன் மூலம் இணைய உலாவல் வேகத்தினை அதிகரித்துக்கொள்ள முடியும்.

Sharing is caring!