இந்திய பெண்கள் அப்படி இணையத்தில் என்னதான் தேடுகிறார்கள் தெரியுமா?

இன்றைய காலக்கட்டத்தில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இணையதள சேவை ஆக மாறிவிட்டது. இணையம் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற அளவிற்கு நாளுக்கு நாள் இணையத்தின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகின்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இந்திய பெண்கள் இணையத்தில் அப்படி என்னதான் தேடுகிறார்கள் என்று பார்த்தால் ஒரு ஆச்சரியமான தகவல் வெளியாகி இருக்கின்றது. 44% பெண்கள் ஆங்கிலப்புலமை, மென்பொருள் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு தேவையான விஷயங்களை தேடுவதாக கூறப்படுகின்றது.

அதிகம் பயன்படுத்தகூடிய நேரம் என்று பார்த்தால் மதியம் 1 மணியிலிருந்து இரவு 9 மணி வரை என்று கூறப்படுகிறது. பெண்கள் அதிகமாக தாய்மொழியைத் தவிர்த்து ஆங்கிலத்தை பயன்படுத்தியே அதிகம் தேடியுள்ளனர்.

அதில், 18 லிருந்து 23 வயதுக்குள் இருக்கும் பெண்கள்தான், இணையத்தில் வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றை அதிகம் தேடுவதாகவும் 29 இல் இருந்து 30 வயதுக்குள் இருக்கும் பெண்கள் ஆரோக்கியம் மற்றும் சுய முன்னேற்றம் குறித்த தகவல்களை தேடுவதாகவும் அந்த ஆய்வானது தெரிவிக்கின்றது.

Sharing is caring!