இந்த apps உங்கள் மொமைலில் இருந்தா உடனே நீக்குங்க

கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக அப்ளிகேஷன்கள் அப்டேட் செய்து வருகிரது.

அதுமட்டுமல்லாது, பாதுகாப்பு இல்லாத செயலிகள் குறித்தும் அறிவிப்புகளை தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், தற்போது தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக 22 பாதுகாப்பில்லாத செயலிகளை கூகுள் ப்ளே-ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.

இதில், ஸ்பார்கில் பிலாஷ்லைட் என்ற ஆப், தரவிறக்கம் செய்யப்பட்ட போன்களில் இருக்கும் தகவல்களைத் திருடுவதால் நீக்கியுள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது.

அதேபோல், சீட்டா மொபைல் ஆப்ஸ் என்ற சீன ஆப் டெவலப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆப்கள் அனுமதியின்றி விளம்பரங்களுக்குள் செல்கின்றன என்பதால் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போனின் சார்ஜ் மற்றும் டேட்டாவை இந்த செயலிகள் அதிகளவில் விரயமாக்குகின்றன.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஏழு ஆப்கள் இதில் அடக்கம். இவற்றில் பிரபல ஆப்களான கிலீன் மாஸ்டர், சிஎம் டாக்டர், பெட்டரி டாக்டர் ஆகிய பிரபல ஆப்களும் அடக்கம்.

இந்த ஆப்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஸ்பார்கில் ஃப்லாஷ்லைட் என்ற செயலி மட்டும் 10 லட்சம் தடவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆப்கள் மீண்டும் ப்ளே-ஸ்டோருக்கு வரும் வரை, இவற்றை டெலிட் செய்வது நல்லது என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!