இன்டர்னெட் பாவனையில் ஏற்பட்ட அதிகரிப்பு..!!

கொரோனா பரவலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பல்வேறு நாடுகள் LockDown முறையை அறிமுகம் செய்துள்ளன.

இதன்காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வழமையை விடவும் மொபைல் இணைய பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 சதவீதத்தினால் மொபைல் இணையப் பாவனை அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் அதிகரிப்பு குறைவாக இருக்கின்ற போதிலும் கிராமப்புறங்களில் 20 சதவீதம் வரையான அதிகரிப்பு காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே ஒட்டுமொத்த இந்தியாவில் சராசரியாக 10 சதவீதத்தினால் மொபைல் இணையப் பாவனை அதிகரித்துள்ளது.

Sharing is caring!