இன்ரநெற் இல்லாமல் கூகிள் பயன்படுத்தலாம்

அன்றாட வாழ்க்கையில் இன்றியமையா தேவைகளில் ஒன்றாகிவிட்ட கூகுளை இனி இண்டெர்நெட் இல்லாமல் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இண்டெர்நெட் இல்லாமல் கூகுளில் இனி எல்லா சேவைகளையும் பெற முடியும். அதாவது ஆண்ட்ராய்டு மொபைலில் க்ரோம் பிரவுசர் (CHROME BROWSER) பயன்படுத்தி இண்டெர்நெட் இல்லாமல் கூகுளை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களை கவர பல்வேறு ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை புதிது புதிதாக அறிமுகப்படுத்தும் கூகுள், “எல்லோருக்கும் எல்லா இடங்களிலும்” என்ற பெயரில் இணைய வசதியே இல்லாமல் பிரவுசரை ஆஃப்லைன் (OFFLINE) மோடில் இருக்கும் போது அதை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது.

இந்த இலவச சேவை குறித்து கூகுள் தயாரிப்பு மேலாளர் அமண்டா பாஸ் கூறுகையில், “ஆஃப்லைன் குரோம் மூலம் இணைய வசதியே இல்லாமல் தேவையானவற்றை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த சேவை மூலம் சமீபத்திய செய்தி, கிரிக்கெட் முடிவு, பிற தளங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய வசதியை பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் குரோம் ஆப்பை அப்டேட் செய்வதன் மூலம் பெற முடியும்” என கூறினார்.

Sharing is caring!