இன்ஸ்டாகிராம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இன்ஸ்டாகிராம் சேவையினை உலகில் பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் ஊடாக கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை நீக்குவதற்கு இன்ஸ்டாகிராம் தீர்மானித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே இவ்வாறானதொடு நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

எனினும் பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் இன்ஸ்டாகிராம் தற்போதுதான் குறித்த பதிவுகளை நீக்க ஆரம்பித்துள்ளது.

இதேவேளை டுவிட்டர் போன்ற ஏனைய சமூகவலைத்தள நிறுவனங்களும் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நீக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!