இயங்கும் பாகங்கள் இல்லாத மிக நுண்ணிய உள்நோக்கி உருவாக்கம்!

லென்ஸ் மற்றும் இயங்கும் பாகங்கள் இல்லாத, மிக நுண்ணிய உள்நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த டிரெஸ்டன் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளினால் இந்த மிக நுண்ணிய உள்நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள், ‘புதிய தொழில்நுட்பத்துடன் இதுவரை இல்லாத அளவுக்கு மனித தலைமுடியைப் போன்று மிகவும் மெல்லிய உள்நோக்கியை உருவக்கியுள்ளோம்.

லென்ஸ், மின்னணு மற்றும் பொறியியல் பாகங்கள் ஏதுமில்லாத அந்த உள்நோக்கி, ஃபைபர் இழையால் ஆனது.

ஒரு ஊசிமுனை தடிமனே இருக்கும் இந்த உள்நோக்கி, மருத்துவத் துறையின் பல்வேறு ஆய்வுகளுக்காக மனித உடலில் எளிதாக செலுத்திப் பயன்படுத்த முடியும்.

ஓர் உயிரணுவை விட நுணுக்கமான பொருட்களையும் மிகத் தெளிவாக முப்பரிமாணப் படமெடுக்கும் அளவுக்கு இந்த உள்நோக்கி துல்லியம் வாய்ந்ததாகும்’ என குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!