உங்களுக்கு பொருத்தமான காதலன் காதலியை கண்டுபிடிக்க Facebook அறிமுகப்படுத்தும் புதிய சேவை..!!

பேஸ்புக் தளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த தளத்தை இளைஞர்கள் தான் அதிகளவில் பயனபடுத்துகின்றனர். இந்நிலையில் கனடா, சிலி, பெரு, சிங்கப்பூர், தாய்லாந்து அர்ஜென்டினாஉள்ளிட்ட 19நாடுகளில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பின்னர்,பேஸ்புக் தனது புதிய டேட்டிங்
இருந்தபோதிலும் நமக்கு ஒரு சிக்கல் உள்ளது, இந்த அட்டகாசமான டேட்டிங் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. அனைவரின் எதிர்பார்ப்பும் எப்போது இந்த சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதே ஆகும். மேலும் இந்த பேஸ்புக் டேட்டிங் சேவை எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.

பேஸ்புக் நிறுவனம் இந்த டேட்டிங் சேவையை 2018 எஃப் 8 டெவலப்பர் மாநாட்டில் அறிவித்தது, குறிப்பாக இந்த சேவை ஒருவரின் பேஸ்புக் நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கான சாத்தியான பொருத்தங்களை பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பேஸ்புக் டேட்டிங் சேவை கண்டிப்பாக அனைவருக்கும் இலவசமாக அணுக கிடைக்கும. பின்பு இந்த சேவையை பொறுத்தவரை ஒருவரின் டேட்டிங் விருப்பத்தேர்வுகள், மியூச்சுவல் ப்ரெண்ட்ஸ், க்ரூப்ஸ் மற்றும் பேஸ்புக் வழியாக கலந்துகொண்ட ஈவன்ட்ஸ் போன்றவைங்களை மட்டுமே நம்பி செயல்படும்.

மேலும் பேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் 221மில்லியன் பயனர்களை கொணடுள்ளதால், டேட்டிங் துறைக்குள் நம்பி நுழைகிறது. பின்பு சமீபத்திய ஆய்வின் அடிப்படையில்அமெரிக்காவில் பத்து பெரியவர்களில் ஏழு பேர் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே இது ஆரம்பிக்கும் போதே அதிக எண்ணிக்கையை கொண்டிருப்பதென்பது மிகவும் சாதகமாக அமையும்.

குறிப்பாக பேஸ்புக் டேட்டிங் சேவை 18வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதே உண்மை. இந்த சேவை இந்தியாவிற்கு கிடைத்தால் கண்டிப்பாக ஒரு வைரஸ் கிருமியை போலவே பரவும்.

தற்சமயம் வரை இந்த சேவை மொபைல் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சேவைக்கு நீங்கள் தனியாக செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை, இது பேஸ்புக் தளத்தில்

நேரடியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. Marketplace மற்றும் Groupsபோன்ற அம்சங்கள் இருக்கும் அதே இடத்தில்,மேல் வலது மெனுவுக்குள் செல்வதன் மூலம் இதை ஒருவர் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!