உங்கள் மரணம் எப்போ? துல்லியமாக கணிக்கும் கூகிள்

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் ஆயுள் எவ்வளவு? எப்போது அவர்கள் இறப்பார்கள் என்பதை கூகுள் துல்லியமாக கணித்து கூறுகிறது.

என்ன தான் வேண்டும், கூகுளிடம் கேளு என்பது போல் அனைத்தையும் தன்னுள் வைத்துக்கொண்டு உலகையே ஆட்டிப்படைக்கும் கூகுள் நிறுவனம் தற்போது மனிதனுடைய இறப்பு தேதியையும் கணித்துக்கூறுகிறது.

கூகுள் நிறுவனத்தின் மருத்துவ அறிவுக் குழு செயற்கை நுண்ணறிவு கணித தொழில்நுட்பத்தின் படி, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா இல்லையா? பிழைத்து விடுவார்களா அல்லது இறந்துவிடுவார்களா? அவர்கள் எத்தனை நாட்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற தகவல்களை 95% துல்லியமாக தெரிவிக்கிறது. இதேபோன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிகளின் படுக்கையில் மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கும் குறிப்பீடு போன்று நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள், நோயின் தாக்கம், எடுக்கப்பட்ட சிகிச்சை முறை, நோயின் தீவிரம், தற்போதைய நிலை என நோயாளிகளை பற்றிய அனைத்து தகவல்களையும் தனது டூலில் சேகரித்து வைத்துக்கொள்கிறது. சேகரித்து வைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு நோயாளி இறப்பை மருத்துவர்களை விட கூகுள் 95% துல்லியமாக கணிக்கிறது.

முன்னதாக சோதனையின் போது மருத்துவமனையில் நோயாளிகளின் மரணத்தை கணித்த கூகுளின் தகவல் 95 மற்றும் 93% துல்லியமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இறப்பதற்கு 9.3% வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கணித்தனர். ஆனால், கூகுள் அந்தப் பெண் இறப்பதற்கு 19.9% வாய்ப்புள்ளதாக கணித்தது. கூகுளின் கணக்குப்படி அந்த பெண் இரண்டே வாரங்களில் இறந்துவிட்டார்.

பிறப்பு, இறப்பு குறித்து மனிதனே அறியமுடியாத நிலையில், கடவுளாக உருமாறி மனித மூளையை விட ஸ்மார்ட்டாக இயங்கும் கூகுள் இன்னும் என்னென்ன வேலைகளை எல்லாம் செய்யபோகுதோ தெரியவில்லை.

Sharing is caring!