உலகமே வியந்து பார்க்கும் சாதனையை நிலைநாட்டிய யாழ் இளைஞன்..!! பலன் பெறப் போகும் பல்லாயிரக் கணக்கான நோயாளிகள்..!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைச் சேர்ந்த இளைஞரொருவர் உலகமே வியந்து பார்க்கும் புதிய தொழில்நுட்பத்தில் புதிய வகையிலான சாதனமொன்றை உருவாக்கியுள்ளார்.

படுக்கையில் உள்ள நோயாளர்களின், விசேட தேவையுடையவர்களின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யக்கூடிய தன்னியக்க நோயாளர் பராமரிப்பு இயந்திரம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.எரிபொருள், மின்சார செலவுகள் இன்றி நீரை மட்டுமே மூலதனமாக கொண்டு நோய் தொற்றுக்கள் ஏற்படாத வகையில், குறித்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.குறித்த இயந்திரத்தில் நோயாளி நிமிர்ந்து அமரக்கூடிய வகையில் படுக்கை அமைப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்டுபிடிப்பிற்கு ஆதரவளித்து நிறுவனங்கள் முன்வந்து குறித்த இயந்திரத்தை உருவாக்கி சந்தைக்கு விடுவதன் மூலம், பல நோயாளர்கள் பலன் பெற முடியும் என குறித்த இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Sharing is caring!