உலகளவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜிமெயில் திடீர் முடங்கல்!

உலகளவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வரும் ஜிமெயில் திடீரென முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று காலை 11 மணி முதல் பலருக்கும் மெயில் கிடைப்பதிலும் சிலருக்கு மெயில் அனுப்புவதும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜிமெயில் மட்டுமின்றி கூகுள் ட்ரைவில் ஆவணங்களை இணைக்க முடியவில்லை என்றும் யூட்யூபில் வீடியோவை அப்லோட் செய்ய முடியவில்லை என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

,இந்நிலையில் இந்த முடக்கம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை விசாரித்து விரைவில் சரி செய்யப்படும் என்றும் இது சர்வீஸ் இன்டரெப்சன் பிரச்சனை காரணமாக இருக்கலாம் கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த முடக்கம் அமெரிக்கா, இந்தியா, இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ஐரோப்பாவில் ஒரு சில நாடுகள், உள்பட மொத்தம் 42 நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!