உலகளவில் வாட்ஸ் ஆப் தனது பயனர்களுக்கு வழங்கவுள்ள தகவல்கள்

உலகளவில் வாட்ஸ் ஆப் செயலியினை ஏறத்தாழ 2 பில்லியன் வரையானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளது.

இதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

ஏற்கனவே பேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்ட வருகின்றன.

இந்த வரிசையில் வாட்ஸ் ஆப் செயலியும் இணைந்துள்ளது.

இதன்படி கொரோனா தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் கண்காணித்து அவற்றினை நீக்குவதுடன், மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வகையிலான உண்மைத் தகவல்களை கொண்டு சென்று சேர்க்கவுள்ளது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு மொபைலில் வாட்ஸ் ஆப்பினை திறந்து https://api.whatsapp.com/send?phone=41225017596&text=hi&source=&data= எனும் இணைப்பில் சென்று இணைய வேண்டும்.

அல்லது +41794752209 எனும் தொலைபேசி இலக்கத்தினை மொபைல் சாதனத்தில் சேமித்து சட் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

Sharing is caring!