உலகின் சக்தி வாய்ந்த ரோபோ இதுதான்

ஒரு மில்லிமீட்டர் அளவிலேயே ஆன உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நரம்பு மண்டலத்தில் ஊடுருவி ஆராய்ச்சி செய்திடுமாம் இது.

உலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். புழுபோன்ற மென்மையான அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு ‘மில்லிரோபோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பார்க்க மட்டும்தான் புழுப்போல இருக்கிறது. ஆனால் இதன் திறன் அதிகம்.

ஒரு மில்லிமீட்டர் அளவு நீலம் மட்டுமே கொண்ட இந்த ரோபோ மனித உடலுக்குள் செலுத்தப்பட்ட உடன் தேவைப்படும் இடத்துக்கு சென்று அங்கு உள்ளிருந்து ஆராய்ச்சி செய்ய உதவுமாம்.  அதிகபட்சமாக பிரச்னை உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்யவும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல, அதிக அழுத்தத்தை இந்த ரோபோ தங்குவதால், உலகில் சக்திவாய்ந்த ரோபோ என்ற சாதனையும் படைத்துள்ளது.  அதாவது ஒரு மனிதரின் மேல் சிறிய பேருந்தை ஏற்றி அவரை நிற்கச்செய்யும் அளவுக்கு இதன் அழுத்தம் தாக்குப்பிடிக்குமாம். மேலும், உடலில் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக மருந்தைக் கொண்டு சென்று செலுத்திடவும் இதனால் முடியும் என்கினறனர் ஆய்வாளர்கள்.

கம்பளிப்பூச்சி போன்று ஊர்ந்து செல்லும் அளவுக்கு அதிக கால்களை கொண்டு இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. எறும்பு போல ஒப்பிட்டால் இது 100 எறும்புகளாய் ஏற்றிச் செல்லக் கூடிய வல்லமை பெற்றது.  ஆக, அறுவை சிகிச்சை போன்ற செயல்பாடுகளுக்கு உரிய கருவிகளை இதுவே தன மீது ஏற்றிச் செல்லும். ‘மில்லிரோபோ’-வை வடிவமைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட விலங்குகளை குறிப்பாக ஊர்வன வகைகளை ஆய்வு செய்ததாக ஹாங்காங் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் செயல்பாடுகள் அனைத்தும் ரிமோட் கண்ட்ரோல்  மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!