எலி சைசில் ஒரு யானை – 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிப்பு

யானையின் சிறப்பே அதன் பெரிய உருவம்தான். அப்படி இருக்கும்போது எலி சைசில் யானையா என்று தலைப்பைப் பார்த்து ஆச்சரியம் வருகிறதுதானே? புலியின் இனத்தில் பூனை இல்லையா? அது போல தோற்றத்தில் எலி போல குட்டியாக இருக்கும் இந்த காட்டு விலங்கு யானையின் இனம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்போது ஏன் இந்த விலங்கு பற்றி செய்தி வருகிறது தெரியுமா? மிகச்சிறிய பாலூட்டி விலங்கான இந்த குட்டி யானை 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது. யானை மூஞ்சூறு என்று அழைக்கப்படும் இந்த விலங்கு ஒன்றினை, ஆப்பிரிக்க நாடானா ஜிபூட்டியில் அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் ஒன்றின்போது தற்போது பார்த்துள்ளார்கள். யானை மூஞ்சூறுவை கடைசியாக 1970ல் பார்த்ததாக அறிவியல் பதிவு உள்ளது. அவ்வளவுதான். பிறகு அதைக் காணவே இல்லை.

Sharing is caring!