ஏ.சி வேண்டாம்….வீட்டை குளிர்ச்சியாக்கலாம்

கரண்ட் பில் ஒரு புறம் தங்கம் விலை போல் ஏற உடல் ஆரோக்கியமோ சர்ரென இறங்குவது ஏ.சி பயன்பாட்டால் தான். ஆனால் இயற்கையாகவே வீட்டை ஜில்லென மாற்ற முடியும். அதற்கு இந்தத் தாவரங்களை வீட்டில் வளருங்கள்.

1. கற்றாழை

உங்கள் தோல் மற்றும் கூந்தலுக்கு எப்படி கற்றாழை சிறந்ததோ அதே போல் வெப்பநிலையைக் குறைத்து, வீட்டை குளிர்விக்கவும் இது உகந்தது. உட்புற காற்று மாசடைதலை இது குறைக்கும்.

2. ஸ்பைடர் பிளாண்ட்

இதுவும் காற்றை குளிர்ச்சியடையச் செய்கிறது. கற்றாழையைப் போல் காற்றிலிருக்கும் மாசுக்களை நீக்கவும்  உதவுகிறது. அதோடு கார்பன் மோனாக்சைடுகளை உறிஞ்சுவதற்கான திறனும் இதில் உள்ளது. கார்பன் மோனாக்ஸைடு என்பது நிறமற்ற, மணமற்ற மற்றும் சுவையற்ற வாயு ஆகும், இது 35 ppm க்கு மேல் செறிவுகளில் காணப்படும் போது மனிதர்களுக்கு நச்சுத்தன்மையைக் கொடுக்கும்.

3. அரீகா பனை

அரீகா, பனை வகையைச் சேர்ந்த  பிரபலமான அலங்கார செடி. நாசா ஆராய்ச்சி ஆவணம், அரீகா பனை “வீடுகள் மற்றும் பணியிடங்களில் காற்றை சுத்தப்படுத்தி, புத்துணர்வு அளித்து,  ஃபார்மால்டிஹைடு, அம்மோனியா போன்ற வேதி பொருட்களால் உண்டாகும் பக்க விளைவுகளில் இருந்து நம்மை பாதுகாப்பதாக” கண்டுப் பிடித்திருக்கிறது.

Sharing is caring!