ஒன்லைன் வங்கிச் சேவை கடவுச் சொற்களை திருடும் மல்வேர்கள்..!!

சைபர் செக்கியூரிட்டி ஆய்வு நிறுவனமான Fortinet அவசர எச்சிரிக்கை ஒன்றினை ஒன்லைன் வங்கிச் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு வெளியிட்டுள்ளது.

அதாவது புதிய ட்ரோஜன் மல்வேர் ஒன்று ஒன்லைன் வங்கிச் சேவைக்காக பயன்படுத்தப்படும் கடவுச் சொற்களை திருடுவதாக தெரிவித்துள்ளனர்.

பயனர் ஒருவர் தனது வங்கிச் சேவையை ஒன்லைனில் பயன்படுத்தும்போது அவரது கடவுச் சொல்லை இரண்டாவது தடவையும் கேட்க வைக்கின்றது இந்த ட்ரோஜன் மல்வேர்.

பயனர் இரண்டாவது தடவை கடவுச் சொல்லினை வழங்கும்போது அதனை சாதுரியமாக பதிவு செய்துகொள்கின்றது.

Metemorfo எனும் குறித்த ட்ரோஜன் மல்வேர் ஆனது கிரடிட் கார்ட் தகவல்கள், தனிநபர் தகவல்கள் மற்றும் நிதி விபரங்களையும் திருடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் உலகளவில் அமெரிக்கா, கனடா, சிலி, பெரு, ஈகுவடோர், பிரேஸில் மற்றும் மெக்ஸிக்கோ நாட்டு வங்கிகள் உட்பட உட்பட சுமார் வெவ்வேறு 20 வரையான வங்கிச் சேவைகளை வெற்றிகரமாக இந்த மல்வேர் தாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Sharing is caring!