ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யும் வசதி; சோதனை செய்கிறது இன்ஸ்டாகிராம்

பலரை பிளாக் செய்யும் வசதி… இன்ஸ்டாகிராம் தனது புதிய சேவையாக ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்து வருகிறது.

பிரபல சமூக வளைதலமான, இன்ஸ்டாகிராம் ஒரே சமயத்தில் பல அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்வதாக தெரிவித்துள்ளது. புதிய அம்சம் கொண்டு இன்ஸ்டாவில் ஏற்படும் குற்றங்களை குறைக்க முயற்சி செய்கிறோம் எனவும், இதுபற்றிய முழு விவரங்களை விரைவில் தெரிவிக்க இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனாளர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்வதை உறுதிப்படுத்தும் ஸ்கீரின்சாட்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும், பயனாளர்கள் பதிவிடும் கமெண்ட்களை தேர்வு செய்து அவற்றை ஆப், ரெஸ்டிரிக்ட் மற்றும் பிளாக் செய்வது போன்ற புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இதுபற்றிய முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது

Sharing is caring!