ஒலிம்பிக் போட்டிகளில் அசத்தப் போகும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்…!!

தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகளாக ரோபோக்கள் கையாளப்படுகின்றன.

ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்த ரோபோக்கள் பங்கேற்க உள்ளன. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. இதனையடுத்து தங்கள் நாட்டில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை பறைசாற்ற ஒலிம்பிக்கை ஜப்பான் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பார்வையாளர்களை வரவேற்பது, போட்டிகளுக்கும், போட்டியாளர்களுக்கும் தேவையான பொருட்களை கொண்டு செல்வது போன்ற செயல்களை செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், மாற்று திறனாளிகளுக்கு உதவும் ரோபோ, மின்சார வாகனங்கள் என அனைத்திலும் ரோபோ தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர். சமீபத்தில்தான் 2020ம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கான அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டது.இவை நீலம், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும் சிறிய ரோபோ பொம்மைகள் ஆகும். இவை மிரைடோவா, சொமைட்டி என பெயரிடப்பட்டுள்ளன.இந்த ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் குழந்தைகளுடன் உரையாடவும், விளையாட்டுகளின் சிறப்புகளை பற்றி எடுத்துரைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

Sharing is caring!