காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்!

மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனமொன்று காற்றை சுத்தப்படுத்தக் கூடிய செயற்கை மரங்களை வடிவமைத்துள்ளது.

இயற்கை மரங்களை வளர்ப்பதற்கு அதிக இடமும், நேரமும் தேவைப்படும் சூழலில், இத்தகைய ஒரு செயற்கை மரம் 368 இயற்கை மரங்களுக்கு இணையாக காற்றிலுள்ள கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயோஅர்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மரங்கள், செயற்கையான வேதிவினைகள் மூலம் இயற்கை தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அளவுக்கு அதிகமான காற்று மாசுபாட்டைக் கொண்டிருக்கும் மெக்ஸிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Sharing is caring!