குழந்தையின் உடலில் பட்டதும் ஒளிரும் மின்குமிழ்கள்..!!அதிசயக் குழந்தையைப் பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்..!

இந்தியாவில் பெண் குழந்தையொன்றின் உடலில் மின்குமிழ் பட்டவுடன் குறித்த மின்குமிழ் எரியும் சம்பவமொன்று நிகழ்ந்து மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், ஆறு மாத குழந்தையின் உடலில் பட்டவுடன் மின்குமிழ் ஒளிர்ந்து அதிசயத்தை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாமசெரலா கிராமத்தை சேர்ந்த ஹரிபாபு – சுஷ்மிதா தம்பதியின் ஆறு மாத பெண் குழந்தைக்கு தான், இந்த அதிசய சக்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்தப் பெண் குழந்தையின் மீது மின்குமிழை வைக்கும் போது மின்சாரத்தில் பொருத்தினால் எப்படி எரியுமோ அதுபோல் குறித்த மின்குமிழ் பிரகாசமாக ஒளிர்ந்துள்ளது.இந்த அதிசயக் குழந்தையை பார்ப்பதற்காக மக்கள் ஹரிபாபுவின் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Sharing is caring!