கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள அட்டகாசமான இலவச வசதி!

தொழில்நுட்பத் துறையின் முன்னோடியான கூகுள் நிறுவனம் பொதுமுடக்க காலத்திற்கு ஏற்றாற் போல் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, கூகிள் மூலம் ஒரே நேரத்தில்  100 பேர் வரை குழு வீடியோ மாநாடுகளை இலவசமாக நடத்தலாம் என அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜூம் நிறுவனம் வீடியோ கான்பரன்சிங் முறையில் புதிய வசதிகளை கொண்டு வந்தது. ஆனால் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து மக்கள் பயன்படுத்த தயங்கினர். 4 பேர் வரை பேசும் வகையில் வீடியோ கான்பரன்சிங் வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் ஆப், அதனை தற்போது 8 ஆக மாற்றியுள்ளது.

இந்நிலையில் தற்போது  கூகுள் தனது பிரீமியம் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே கார்ப்பரேட் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த சேவையை ஒரே நேரத்தில்  100 பேர் வரை இலவசமாக பேசலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Sharing is caring!