கூகுள்-ஆப்பிள் கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனை முதலில் அறிமுகம் செய்யும் நாடு

அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள் மற்றும் ஆப்பிள் இணைந்து கொரோனா வைரஸ் தாக்கத்தினை கண்டறியக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷன் ஒன்றினை தயாரிப்பதாக ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.

இப்படியான நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான Lativa குறித்த அப்பிளிக்கேஷனை முதன் முதலில் அறிமுகம் செய்யும் நாடுகளுள் ஒன்றாக இருப்பதாக தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறெனினும் இதற்கு முன்னர் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் இவ்வாறானதொரு அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனில் சில குறைபாடுகள் காணப்படுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ப்ளூடூத்தின் உதவியுடன் கொரோனா தொற்றியவரை அடையாளம் காணும் குறித்த அப்பிளிக்கேஷன் ஐபோன்களில் மிகவும் குறைந்த தூரத்திற்கே செயற்படுகின்றது.

இதேவேளை Lativa அறிமுகம் செய்யும் Apturi Covid (Stop Covid) எனும் அப்பிளிக்கேஷனானது உலகில் உள்ள 99 சதவீதமான iOS மற்றும் Android சாதனங்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!