கூகுள் இமேஜஸ்-ல் ‘இடியட்’ (முட்டாள்) என்ற வார்த்தையில் டிரம்ப்??

கூகுள் நிறுவனம் சில செயல்களை திட்டமிட்டு செய்வதாக அமெரிக்க எம்.பிக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையை நேரில் ஆஜராகுமாறு அமெரிக்க நாடாளுமன்ற குழு உத்தரவிட்டது. அதன்படி, அமெரிக்க எம்.பி.க்கள் குழுவிடம் சுந்தர்பிச்சை ஆஜரானார். அவரிடம் அமெரிக்க எம்.பி.க்கள் ஏராளமான கேள்விகளை கேட்டனர்.

சுந்தர் பிச்சையும் எல்லா கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தார். அப்போது, ஜோ லோப் கிரன் என்பவர், கூகுள் தேடும் தளத்தில் தேடப்படும் முடிவுகளை, கூகுள் நிறுவனம் அரசியல் ரீதியாக கையாள்வதாக குற்றம் சாட்டினார். இதை சுந்தர்பிச்சை மறுத்தார்.

இதையடுத்து, கூகுள் இமேஜஸ்-ல் ‘இடியட்’ (முட்டாள்) என்ற வார்த்தையை டைப் செய்தால், வெளியாகும் படங்களில் அதிபர் டிரம்ப் புகைப்படங்கள் வருவது எப்படி? என கேள்வி எழுப்பினார். இதற்கு சுந்தர்பிச்சை அளித்த பதிலில், ‘‘கூகுள் தேடு தளம் கணிப்பு நெறிமுறைப்படி (அல்கரிதம்) செயல்படுகிறது.

இந்த முறையில் ஒரு வார்த்தையை தேடும்போது, ஆயிரக்கணக்கான வெப்சைட்களில் உள்ள தகவல்கள் ஒன்று திரட்டப்பட்டு முடிவுகள் வெளியாகும். யாராவது ஒருவர் இடியட் என்ற பெயரில் அதிபர் டிரம்ப் படத்தை ஒரு வெப்சைட்டில் சேர்த்திருந்தால், அந்த படம் முடிவுகளாக வெளிவரும்.

புதிதாக சேர்க்கப்பட்டவை, தொடர்புடையவை, பிரபலம் என்ற அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகும். 200 சிக்னல்களை பயன்படுத்தி, இந்த முடிவுகளை கூகுள் பட்டியலிடுகிறது. இதற்கு மெடா டேக் முறை பயன்படுத்தப்படுகிறது.

ஆயிரக்கணக்கானோர், டிரம்ப் போட்டோவை இடியட் என்ற பெயரில் அப்லோடு செய்திருப்பதால், அவரது போட்டோ வெளியாகிறது’’ என்றார்.வயதானவர்களுக்கு தெரியாது: இந்த விசாரணை குறித்து சுந்தர் பிச்சை கூறுகையில், ‘‘என்னை கூண்டில் நிற்க வைத்து அமெரிக்க எம்.பிக்கள் கேள்வி கேட்பதாக நினைக்கவில்லை.

வயதான எம்.பி.க்களுக்கு இன்டர்நெட் எப்படி செயல்படுகிறது என்பது தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு என்னால் முடிந்த விளக்கம் அளித்தேன்’’ என்றார்.

Sharing is caring!