கூகுள் மேப்பில் தரப்படும் புத்தம் புதிய வசதி..!!

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனத்தின் மேப் அப்பிளிக்கேஷன் ஆனது மிகவும் பிரபல்யமானதாகும்.

இதில் பல்வேறு வசதிகள் பயனர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் மற்றுமொரு புதிய வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதாவது நோயாளிகளுக்கு சர்க்கர நாற்காலி தேவைப்படும்போது அவற்றினை எங்கெங்கே பெற்றுக்கொள்ள முடியும் என அறிந்துகொள்ளம் வசதியே உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கூகுள் நிறுவனத்தின் பணிப்பாளரான சுந்தர் பிச்சை அவர்கள் தனது டுவிட்டர் பதிவின் ஊடாக வெளியிட்டுள்ளார்.

அன்ரோயிட் மற்றும் iOS அப்பிளிக்கேஷன்களில் இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் தற்போது அவுஸ்திரேலியா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் மாத்திரமே தற்போது இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Sharing is caring!