கொரோனாவை எளிதில் கொல்லும் புற ஊதா எல்.இ.டி.க்கள்..!! ஆய்வுகளில் வெளியான மகிழ்ச்சித் தகவல்..!!

புற ஊதா எல்.இ.டி.க்கள் (ஒளி உமிழும் டயோட்கள்) கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் இதழ் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ஹதாஸ் மமனே கூறுகையில்,

கொரோனா வைரஸ் கிருமி நீக்கம் செய்வதற்கு உலகம் முழுவதும் தற்போது பயனுள்ள தீர்வுகளை தேடுகிறது.அந்த வகையில் புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை ஒழிப்பதில் பயனளிக்க வல்லது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தி கொரோனா வைரசை மிக எளிதாகவும் அதே சமயத்தில் விரைவாகவும் கொல்ல முடிகிறது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!