கொரோனா பரவலால் பேஸ்புக் நடைமுறைப்படுத்தும் மாற்றம்
சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் என்பன தமது வீடியோக்களின் தரத்தை குறைத்து காண்பிக்கக்கூடிய வகையில் மாற்றத்தினைக் கொண்டுவந்திருந்தன.
தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலை காரணமாக மக்கள் வீட்டிலியே தங்கியிருப்பதனால் எல்லை மீறிய டேட்டா பரிமாற்றத்தினை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இது ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனமும் தனது வலைத்தளத்திலுள்ள வீடியோக்களை குறைந்த தரத்தில் காண்பிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
இதுவும் ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமே நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றது.
மேலும் அடுத்துவரும் 30 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் என்பனவற்றின் வீடியோக்கள் தரம் குறைத்தே காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S