கொரோனா வைரஸ் சூரிய ஒளியில் அழிந்துவிடும்! ஆய்வில் வெளியான தகவல்!!

சூரிய ஒளியில் கொரோனா வைரஸ் விரைவில் அழிந்து விடும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.  

அமெரிக்காவின் தேசிய BIODEFENCE பகுப்பாய்வு மையம் நடத்திய ஆய்வில் மேற்பரப்பு மற்றும் காற்றில் இருக்கும் கொரோனா வைரஸை சூரிய ஒளி அழிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 21 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 20 சதவீத ஈரப்பதத்தில் 18 மணி நேரமாக உள்ள கொரோனா வைரஸின் ஆயுள், ஈரப்பதத்தை உயர்த்தும் போது 6 மணி நேரமாக குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சூரிய ஒளியை செலுத்தும் போது இரும்பு, கதவுப்பிடி உள்ளிட்ட மேற்பரப்புகளில் இருக்கும் வைரஸ், வெறும் 2 நிமிடங்களிலேயே அழிந்து விடுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், காற்றில் இருக்கும் கொரோனா வைரஸ், சூரிய ஒளி பட்டதும் ஒன்றரை நிமிடங்களில் அழிந்து விடுவதாகவும் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

Sharing is caring!