சந்திரயான் -2 : நாசாவை விஞ்சிய இஸ்ரோ !

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டமான சந்திரயான் -2 விண்கலம், இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. சந்திரயான் விண்கலத்தை சுமந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிடத்தில் அது புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சந்திரயான் -2 விண்கல திட்டம் வெற்றிப் பெற்றதை நாடே கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில், இன்னொரு மகிழ்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய, இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் -2 விண்கலத்துக்கான திட்டத்தின் மொத்த செலவு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப செலவிட்டதைவிட 20 மடங்கு குறைவு. அதாவது, இந்தத் திட்டத்துக்கு நாசா 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்திருந்த நிலையில், இஸ்ரோ சுமார் 1,000 கோடி ரூபாய் செலவிலேயே இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

அத்துடன், அவென்ஜர்ஸ், எண்ட்கேம் ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களுக்கான தயாரிப்பு செலவை விட, சந்திரயான் -2  திட்ட செலவு குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!