சர்வதேச டெவலப்பர் நிகழ்வு ஆன்லைனில் நடக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு… ஆப்பிள் நிறுவனம் தனது 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது 31-வது சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் மாதம் ஆன்லைன் முறையில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவுக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெட்ரெய்கி டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைன் கீநோட் மற்றும் அமர்வுகளாக நடைபெறும் என தெரிவித்திருக்கிறார். ஆன்லைன் நிகழ்வுக்காக பிரத்யேக வழிமுறை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். 14, மேக் ஒ.எஸ். 10.16, வாட்ச் ஒ.எஸ். 7 மற்றும் டி.வி. ஒ.எஸ். 14 உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. வாட்ச் ஒ.எஸ். 7 தளத்தில் ஸ்லீப் டிராக்கிங், டேக்கிமீட்டர், வாட்ச் ஃபேசை பகி்ர்ந்து கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.

2020 சர்வதேச டெவலப்பகள் நிகழ்வில் உலகின் 155 நாடுகளை சேர்ந்த டெவலப்பர்களின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் கருத்துக்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படும். ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் பட்டியலில் உலகம் முழுக்க சுமார் 2.3 கோடி பேர் பதிவு பெற்ற டெவலப்பர்களாக இருக்கின்றனர்.

டெவலப்பர்கள் நிகழ்வு குறித்த கூடுதல் விவரங்கள் ஜூன் மாதத்திற்குள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஆப்பிள் டெவலப்பர் ஆப் மற்றும் டெவலப்பர் வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sharing is caring!