சர்வதேச விஞ்ஞானிகளை மிஞ்சிய இலங்கையர்கள்…புதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்து அசத்தல்..!!

இலங்கை விஞ்ஞானிகள் முதல் முறையாக வான்வெளியில் புதிய கிரக மண்டலம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. வானியல் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் புதிய கிரக மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்திற்கு வெளியே இந்த புதிய கிரக மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் 20ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!