சாதனை…LTE Chip இந்தியாவிலேயே உற்பத்தி

பிரபல மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ‘ஸோகோ’ (Zoho) நிறுவனம் முதல் முறையாக இந்தியாவிலேயே எல்.டி.இ சிப் -யை(LTE Chip) உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல மென்பொருள் நிறுவனமான ‘ஸோகோ’ நிறுவனம் தற்போது இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தலைமையில் 50 பேர் கொண்ட குழு, 4ஜி உபயோகத்திற்கான  ‘எல்.டி.இ சிப்’  உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். முறையாக எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுவனத்தின் ஒரு கிளையான பெங்களூருவில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளனர் இந்த குழுவினர். இந்தியாவிலேயே முதல்முறையாக இவர்கள் தான் இந்த ‘எல்.டி.இ சிப்’ ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளனர்.

இதுவரை இந்தியா எல்.டி.இ சிப் உருவாக்குவதற்கு மற்ற நாடுகளையே நம்பியிருந்தது. இந்நிலையில், ”ஸோகோ’நிறுவனம் ஆராய்ச்சியில் வெற்றி கண்டது மூலம் ஹவாய், இன்டெல் உள்ளிட்ட அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் வேம்பு கூறுகையில், “எல்.டி.ஐ மோடம் அனைத்தும் வெளிநாடுகளில் தான் தயாரிக்கப்பட்டது. இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது. தற்போதையை காலகட்டத்தில் மொபைல் போன்கள் அனைத்து தரப்பினரிடையேயும் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே அதில் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்தியாவிலே தயாரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் உயரும். எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த ப்ரொஜக்டில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதன்படி எனது குழுவினரின் உதவியுடன் வெற்றியும் கிடைத்துள்ளது. இந்தியாவில் புதிய டெக்னாலஜிகளை உருவாக்கும் திறமை நம்மிடம் உள்ளது. அதை வெளிக்கொண்டு வர வேண்டும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த் எல்.டி.இ சிப் ஆராய்ச்சி குறித்த தகவல்கள், அடுத்து முறையாக எப்போது தயாரிப்பு நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Sharing is caring!