சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..!!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

ஜூன் 11 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே வழங்கப்படுவதை சாம்சங் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2340 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ-டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!