சியோமி நிறுவன புதிய சாதனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம்

டீசர்கள் வெளியீடு… சியோமி நிறுவனத்தின் புதிய சாதனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் டீசர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் Mi அவுட்-டோர் ஸ்பீக்கர், டூயல் டிரைவர் வையர்டு இயர்போன், Mi டூத்பிரஷ் என அக்சஸரீக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் சியோமியின் புதிய சாதனம் மார்ச் 16-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதற்கென அந்நிறுவனம் புதிய டீசர்களை வெளியிட்டுள்ளது. அதன்படி டீசர்களை பார்க்கும் போது சியோமி நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட பவர் பேங்க் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

சியோமி வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில், “One less wire to deal with. Mi fans, it’s time to #CutTheCord. All the power you need without any hassle. Guess what this is.” என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதிலுள்ள ஹேஷ்டேக்கில் புதிய சாதனம் வயர்லெஸ் வசதி கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது. வீடியோவில் உள்ள விவரங்கள் சார்ஜிங் சார்ந்து இருக்கின்றது.

இதனால் சியோமி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சாதனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட பவர் பேங்க் தான் என கூறப்படுகிறது. சியோமி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் Mi 10 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளதால், புது சாதனம் வயர்லெஸ் சார்ஜிங் பவர் பேங்க் தான் என்றே கூறப்படுகிறது.

Sharing is caring!