சுவிட்சர்லாந்தில் விபத்து ஒன்றை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முதியவர்..!! நிரபராதி என நிரூபிக்க கணிதத்தை பயன்படுத்த திட்டம்!

சுவிட்சர்லாந்தில் விபத்து ஒன்றை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முதியவர் ஒருவர் தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக கணிதத்தை பயன்படுத்த இருக்கிறார்.

Schaffhausen என்ற சுவிஸ் நகரத்தைச் சேர்ந்த எமில் (77) என்பவரின் கார், ஜேர்மன் எல்லையில் வேன் ஒன்றின்மீது மோதியது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக எமில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது கார் சாலையின் எதிர் திசையில் நிற்பதை தாங்கள் கண்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

ஆனால், விபத்துக்குப்பின் ரிவர்ஸ் எடுத்த வேன், தனது காரை பின்னோக்கி நகர்த்தி விட்டதாக எமில் தெரிவித்துள்ளார்.

அதை தன்னால் கணிதம் மூலம் நிரூபிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டு காகிதங்களுடன் நீதிபதி முன் தோன்ற முடிவு செய்துள்ள எமில், தனது கார் மற்றொரு வாகனத்தால் தள்ளிச்செல்லப்பட்டிருந்தாலொழிய, அது எதிர் திசைக்கு சென்றிருக்க முடியாது என்பதை கணித சூத்திரங்கள் மூலம் நிரூபிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எமில், சூரிச்சை சேர்ந்த ஓய்வு பெற்ற ஒரு இயற்பியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.