சூரியனை பற்றி கவலையில்லை!!! வந்தாச்சு செயற்கை சூரியன்!

உலக உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் சூரியன் அளவில் மிகப்பெரியது. அதைக் காட்டிலும் பூமி மிகச் சிறியது. இந்நிலையில், செயற்கையான சூரியனை உருவாக்கும் பணிகளை சீனா முடுக்கிவிட்டுள்ளது.

இது ஒரு அணு இணைவு கருவி என கூறப்படுகிறது. இதன் மூலம் 182 மில்லியன் டிகிரி செல்சியம் வெப்பத்தை உருவாக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. 12 செயற்கை சூரியன்களின் சக்திக்கு இந்த ஒரு செயற்கை சூரியன் சமம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கருவிக்கு HL-2M Tokamak என பெயரிடப்பட்டுள்ளது. 1950களில் சோவியத் யூனியன் அதிகாரிகள் வழங்கிய தொகாமக் உலையை அடிப்படையாக கொண்டு இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த கருவிக்கு அதிகாரப்பூர்வமாக EAST (Experimental Advanced Superconducting Tokamak) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்த கருவி 2006ஆம் ஆண்டு சுவிச் ஆன் செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து இயக்குவதற்கு ஏராளமான பணிகள் தேவை.

2018ஆம் ஆண்டு இக்கருவி 180 மில்லியன் டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பநிலையை எட்டியது. குழுவினர் நிர்ணயித்த இலக்கில் இது பாதி மட்டுமே. முழு இலக்கையும் இந்தாண்டின் இறுதிக்குள் எட்டுவதற்கு கடுமையாக முயற்சித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!