செயற்கை விண்கற்கள் ….யப்பான் சாதனை

விண்வெளியில் இருக்கும் சிறு பாறைகள் போல இருக்கும் உலோக துண்டுகள் தான் மீட்டியோர் என்று அழைக்கப்படும் விண்கற்கள் . இவை ஆஸ்டெராய்டை விட மிக சிறிய கற்கள் ஆகும். பூமியின் காற்று மண்டலத்தில் விண்கற்களோ அல்லது வால்வெள்ளியோ நொடிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் போது அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை எரிகற்கள் என்று கூறுவர். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தோன்றி சில நிமிடங்களுக்கு விண்ணில் பிரகாசிக்கின்ற விண்கற்களும் எறிகற்களும்  தான் விண்கற்கள் மழை எனப்படும் .

ஜப்பானிய நிறுவனம் ஒன்று செயற்கை முறையில் விண்கற்கள் மழை உருவாக்கியுள்ளது. 2020-ஆம் ஆண்டு ஹிரோஷிமா பகுதியின் மீது இந்த விண்கல் மழை காணப்படும் என்று தகவல்கள் வெளியாகிவுள்ளது . இந்த நிறுவனம் இரண்டு மைக்ரோ செயற்கைக்கோள்களை உருவாக்கி இதன் மூலம் விண்வெளியில் சிறு உலோக பாறைகளை வெளியிட்டு விண்கற்கள் மழையாக தோன்றச் செய்யும். மார்ச் 2019-ல் ஜப்பான் விண்வெளி மையம் முதலாவது செயற்கைக்கோளை விண்வெளியில் ஏவும். அதே வருடத்தில் இரண்டாவது செயற்கைக்கோளும் ஏவப்படும் என்ற தகவல் வெளியானது .

ஒவ்வொரு செயற்கைகோளும் 400 விண்கற்களை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள்கள் விண்வெளியில் குறைந்தது 2 வருஷம் வரை தங்கும். இந்த செயற்கைகோள்களிலிருந்து வெளியாகும் விண்கற்கள் காற்று மண்டலத்திற்குள் வரும்பொழுது ஜொலிக்க ஆரம்பித்துவிடும். உலகின் அணைத்து பகுதிகளிலும் இந்த விண்கற்கள் மழையை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பதாக ஜப்பான் விண்வெளி நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். முதல் கட்டமாக ஜப்பானின் மேற்கு பகுதியான ஹிரோஷிமா மீது விண்கற்கள் மழை பொழியும். ஜப்பான் மக்களின் கண்களுக்கு இந்த காட்சி நல்ல விருந்து தான்.

Sharing is caring!